ஹேர் ஸ்பா சிகிச்சையின் மூலம் பெறும் நன்மைகள்..!!

Read Time:6 Minute, 50 Second

ஹேர்-ஸ்பா-சிகிச்சையின்-மூலம்-பெறும்-நன்மைகள்அழகு நிலையங்களில் ஹேர் ஸ்பா சீரமைப்பு என்பது ஒரு சமீபத்திய ட்ரெண்ட் ஆகும். இது முடி வளர்ச்சிக்கான சிகிச்சை ஆகும். பெரும்பாலான மக்கள் பொடுகு, முடி உதிர்தல், கரடுமுரடான மற்றும் பொலிவிழந்த முடி போன்ற முடி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் ஹேர் ஸ்பா சிகிச்சை மூலம் இந்த பிரச்சனைகளைக் குறைக்க முடியும். இது உச்சந்தலை சீரமைப்புக்கு பயன்படுவதன் மூலம்,நன்கு ரிலாக்ஸ் அளித்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இங்கு ஹேர் ஸ்பா சிகிச்சையின் பலன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மென்மையான முடி ஹேர் ஸ்பா சீரமைப்பு மயிர் கால்களை வலுவடையச் செய்து முடியை வளரச் செய்கிறது. இது முடி வளர்ச்சிக்கான ஒரு சிகிச்சை ஆகும். இது முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. பொலிவிழந்த மற்றும் சேதமடைந்த முடிக்கு ஸ்பா சிகிச்சை அற்புதமான முடிவு கொடுக்கிறது. மென்மையான மற்றும் ஆரோக்கியமான முடி, ஹேர் ஸ்பா முறை மூலம் உறுதி செய்யப்படுகிறது.

பொடுகு நீக்குகிறது பலர் முடி இழப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றிற்கு ஸ்பா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாகும். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம், காலநிலை, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் முடி முறையற்ற பராமரிப்பு போன்றவை முக்கிய காரணங்களாகும். ஹேர் ஸ்பா சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், ரிலாக்ஸ் அடைவதுடன் மன அழுத்தம் குறைந்து முடி வளர்ச்சி ஏற்படும்.
அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடி ஹேர் ஸ்பா சிகிச்சை மயிர் கால்களை வலுவடையச் செய்வதால், முடியை அடர்த்தியாக வளரச் செயும். ஸ்பா சிகிச்சை முடியை சீரமைப்பதோடு மட்டுமின்றி, முடியை அதிகரிக்க செய்து ஆரோக்கியமான தோற்றம் அளிக்கின்றது.

உச்சந்தலை வயதை தடுக்கிறது உச்சந்தலை வயதாவதால் முடி இழப்பு ஏற்படும். ஆனால் ஹேர் ஸ்பா சிகிச்சையானது, இதனை தடுத்து உச்சந்தலையில் சரும சுரப்பை தோன்ற செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உச்சந்தலையில் மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால், இது ஒரு சிறந்த முறையாகும்.

மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் இன்றைய வாழ்க்கையில் மிகவும் பொதுவான பிரச்சனை மன அழுத்தம். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் முறையற்ற வாழ்க்கை, வேலை அழுத்தம். இதற்கான சிறந்த தீர்வு ஸ்பா சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சை உச்சந்தலையில் மசாஜ் செயும் முறையை உள்ளடக்கி இருப்பதால், இது உடலுக்கு தளர்வளித்து, மன அழுத்தத்தை குறைக்கின்றது. இதனால் முடி நன்றாக வளரும்.

பொலிவிழந்த முடியை தடுக்கும் ஹேர் ஸ்பா சிகிச்சை மசாஜ் செய்வதை உள்ளடக்கி இருப்பதால், இதன் மூலம் உச்சந்தலையில் எண்ணெய் ஆழமாக ஊடுருவி செல்லும். இந்த எண்ணெய் முடிக்கு ஊட்டமளித்து முடியை பொலிவிழந்த நிலையிலிருந்து தடுக்கும்.

உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரிக்கின்றது ஆரோக்கியமான உச்சந்தலை, வலுவான முடி வளர்ச்சியை பிரதிபலிக்கின்றது. உச்சந்தலையை அழுக்கு இல்லாமல் பராமரிக்கும் போது, முடி வளர்ச்சியில் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஹேர் ஸ்பா சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம், உச்சந்தலையை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க முடியும்.

எண்ணெய் சுரப்பை சரி செய்கின்றது முடியை நன்றாக மற்றும் ஆரோக்கியமாக பராமரிக்க, உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பு சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எண்ணெய் குறைவாக சுரந்தால், பொலிவிழந்த மற்றும் உலர்ந்த முடி ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பு அதிகம் இருந்தால், முடி ஓட்டும் தன்மை பெறுகின்றது. ஆகவே முடியை ஆரோக்கியமாக பராமரிக்க உச்சந்தலையில் எண்ணெய் சுரப்பு சீரானதாக இருக்க வேண்டும். அதற்கு ஹேர் ஸ்பா உதவும்.

அசுத்தங்களை நீக்குகிறது
மாசு காரணமாக முடி எளிதில் சேதமடைகிறது. மயிர் கால்களில் தேங்கும் அசுத்தங்களால் முடி இழப்பு உண்டாகும். வழக்கமாக முடியை அலசுதல் மற்றும் ஹேர் ஸ்பா சிகிச்சையை மேற்கொள்ளுதல், முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும். ஹேர் ஸ்பா சிகிச்சை ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் பொலிவிழந்த முடியை சரிசெய்வதில் உறுதி அளிக்கின்றது.

ஊட்டச்சத்து நிறைந்த முடி
ஸ்பா சிகிச்சையில் மீண்டும் ஈரப்பசையூட்டப்படுகிறது. இது எண்ணெய் சுரப்பை சமன் செய்து முடியை மென்மையாக மற்றும் மிருதுவாக்குகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேவலமான மற்றும் விசித்திரமான பாலியல் பழக்கங்கள்..!!
Next post தாம்பத்தியத்தில் பெண்களுக்கு சந்தேகம் வருவது ஏன்?..!!