உயர் ரத்த அழுத்தமா கத்தரிக்காய் சாப்பிடுங்கள்..!!

Read Time:2 Minute, 51 Second

உயர்-ரத்த-அழுத்தமா-கத்தரிக்காய்-சாப்பிடுங்கள்நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான சத்துக்கள் நாம் உண்ணும் காய்கறிகளிலிருந்தே பெறப்படுகிறது. ஒவ்வொரு காயிலும் தனித்துவமான சத்துக்களானது நிறைந்துள்ளது.

அனைவருக்கும் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய காய் கத்தரிக்காய். அதில் ஏராளமான சத்துக்களானது நிறைந்துள்ளது.

கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்தானது, சருமத்தினை மென்மையாக்கும். இதில் உள்ள விட்டமின் சி மற்றும் இருப்புச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை பெற்றது கத்தரிக்காய். வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல்பருமன் முதலியவற்றினை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.

போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றலானது அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடென்ட்கள் கொழுப்பினை கரைத்து உடல் எடையினை குறைக்கும். மூளை செல்களை பாதுகாக்கும்.
கத்தரிக்காயினை பிஞ்சாய் சாப்பிடுவதே நல்லது. பெரிய கத்தரிக்காயினை அதிக அளவு சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும்.

புற்றுநோய் வராமல் காக்கும். விட்டமின் பி தக்க அளவில் இருப்பதால் இருதய நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தினை சமன்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் உருவாக விட்டமின் பி பயன்படுகிறது.

பசியின்மை குறையும். உடல் வலு அதிகரிக்கும். மூச்சு விடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது போன்றவை குறைக்கப்படும்.

டைப் 2 நீரிழிவினை தடுக்கிறது. முற்றிய காய்களில் உள்ள விட்டமின் ஏ அதிக அளவில் உள்ளதால், உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

குறிப்பு
உடலில் சொறி, சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காய் உண்பதை தவிர்க்க வேண்டும். உடல் சூட்டினை அதிகரிப்பதால் புண்கள் ஆற நாட்கள் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்..!!
Next post 140 மில்லியன் ஆண்டுகள்: உலகின் மிகப்பெரிய டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு..!! (வீடியோ)