திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான மம்முட்டி சினிமா..!!

Read Time:1 Minute, 53 Second

201703291731080785_mammootty-movie-release-internet-before-release_SECVPFசினிமா படங்கள் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்தபிறகே திரைக்கு வரும் சூழ்நிலை உள்ளது. பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு திருட்டு சி.டி. பெரிய தலைவலியாக உள்ளது.

தற்போது சினிமா படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியாகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. மலையாள படஉலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் மம்முட்டி. இவருக்கு தமிழ் திரைஉலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ‘கிரேட் பாதர்’ என்ற புதிய மலையாள படத்தில் நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். இந்த புதிய திரைப்படம் நாளை (30-ந்தேதி) திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் நேற்றே இணையதளங்களில் வெளியாகி விட்டது.

இது மம்முட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ‘கிரேட் பாதர்’ படத்தின் தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. அவர் இதுபற்றி சைபர்கிரைம் போலீசில் புகார் செய்து உள்ளார்.

போலீசார் எடுத்த உடனடி நடவடிக்கையின் காரணமாக ‘கிரேட் பாதர்’ படத்தின் முக்கிய காட்சிகள் வெளியான இணையதளமான ‘கல்சர் அன்ட் ஆர்ட்’ என்ற இணைய தளம் முடக்கப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி?..!!
Next post செக்ஸ்சில் தினம் தினம் புதிது புதிதாக ஐடியாக்கள்..!!