விவாகரத்து செய்தது ஏன்? கணவர் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

Read Time:1 Minute, 51 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)முன்னாள் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக பிரபல நடிகை சார்மிளா பேட்டியளித்துள்ளார்.

இவன் வேற மாதிரி, மகான் கணக்கு போன்ற பல தமிழ்படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து புகழ்ப்பெற்றவர் நடிகை சார்மிளா.

இவர் கடந்த 1995ல் பிரபல நடிகர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்தார், பின்னர் 1999ல் அவரை சார்மிளா விவாகரத்து செய்தார்.

இதனிடையில், தான் கிஷோரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தற்போது பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், கிஷோர் ஒரு சினிமா படப்பிடிப்பில் தன் காதலை என்னிடம் வெளிப்படுத்தினார்.

நானும் அதை ஏற்று கொண்டு அவரை திருமணம் செய்தேன், பின்னர் தான் அவர் சுயரூபம் எனக்கு தெரிந்தது.

என்னை சினிமாவில் நடிக்க கூடாது என தடை உத்தரவு போட்டார்.

மேலும், நான் கர்ப்பமாக இருக்கும் போது என்னை அடித்து துன்புறுத்தியதுடன் என் வயிற்றில் உள்ள குழந்தையை கொல்லப்பார்த்தார்.

அவர் வற்புறுத்தலால் தான் நான் கருக்கலைப்பு செய்தேன் என கூறியுள்ளார்.

ஆனால் இதை மறுத்துள்ள நடிகர் கிஷோர், சார்மிளா போதை பழக்கத்துக்கு அடிமையானதால் விவாகரத்து செய்ததாக கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இளம் பெண்கள் : நடந்த விபரீதம்..!!
Next post உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி?..!!