சுருக்கங்கள் மறைய எளிதான வழிகள் இங்கே..!!
வெயில் அலைவதால் அல்லது ரசாயன அழகுப் பூச்சுக்களால் விரியவில் சுருக்கங்கள் வந்துவிடும். அதிகப்படியான சரும வறட்சியினாலும் சுருக்கங்கள் உண்டாகிவிடும். 40 வயது கடந்தவர்கல் பொடாக்ஸ் ஊசி போடுவதை காண்கிறோம். ஆனால் அது மிகவும் கெடுதலான செயல். அதற்கு பதிலாக நமது மூலிகைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல மாற்றம் வருவதை கண்கூடாக காணலாம். சுருக்கங்களை மறைய வைப்பது எளிதுதான். ஆனால் அதனை கண்டுகொள்லாமல் விடும்போது அது நிரந்தரமாகிவிடுகிறது.
சுருக்கங்களை போக்கி முகம் இளமையாக இருக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.
முட்டைகோஸ் சாறு : முட்டைக் கோஸின் சாற்றை எடுத்து அதனுடன் சிறிது ஈஸ்ட் , ஒரு ஸ்பூன் தேன் கலந்து நமுகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.
வாழைப் பழம் ரோஸ் வாட்டர் : நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.
கேரட் சாறு சம அளவு கேரட் சாறு மற்றும் தேன் கலந்து அதில் கால் கப் வேப்பிலை சாறு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே விடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
சாத்துக்குடி சாறு சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவலாம்.
துளசிச் சாறு : ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.
Average Rating