பெண்ணிற்கு பாலியல் தொல்லை: துல்கர் சல்மான் பட கதையாசிரியருக்கு 3 ஆண்டு சிறை..!!
துல்கர் சல்மான் – சன்னி வெய்ன் நடிப்பில் கடந்த 2013-ஆம் வெளியான படம் `நீலகாசம் பச்சகடல் சுவ்வன்ன பூமி’. சமீர் தாஹீர் இயக்கிய இப்படத்திற்கு திரைக்கதையை ஹாசீர் முகமது எழுதியிருந்தார். படம் வெளியான சில நாட்களிலேயே முகமது மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதில் நிர்வாணமாக வந்த முகமது, தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த வழக்கு பதிந்த போலீசார், 3 வருடங்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் முகமது போதைமருந்து பருகி இருந்த போது, தனது வீட்டிற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரளாவின் எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating