உறவினர் கற்பழித்ததால் கர்ப்பம்: மாணவி தீக்குளித்து தற்கொலை..!!
சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 2-வது செக்டர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் மணிமாலா (வயது 15) 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வந்தார்.
நேற்று காலை மணிமாலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மணிமாலாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது மணிமாலா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தற்கொலை செய்ததற்கான காரணத்தை மணிமாலா எழுதி வைத்திருந்தார். அதன் விவரம் வருமாறு:-
பழனிவேலுவின் தங்கை கணவர் சரவணன் (வயது 45). அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் விருகம்பாக்கம் சின்மயாநகர் அழகப்பா நகரில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். சரவணன், மணிமாலாவுக்கு மாமா முறை என்பதால் அவரது வீட்டுக்கு சென்று மணிமாலா அடிக்கடி விளையாடுவது வழக்கம்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிமாலாவை விளையாட வருமாறு சரவணன் அழைத்துள்ளார். வீட்டுக்கு வந்த மணிமாலாவுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சரவணன் கற்பழித்தார். மயக்கம் தெளிந்தபோது இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டினார்.
இந்த நிலையில் மணிமாலாவுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மணிமாலாவிடம் காரணத்தை கேட்டபோது அவர் நடந்தவற்றை கூறினார். இதனால் அவளது பெற் றோர் அதிர்ச்சி அடைந்தனர். சரவணன் உறவினர் என்பதால் தட்டிக்கேட்க முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் சரவணன் மணிமாலாவை சந்தித்து தன்னிடம் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ இருப்பதாகவும், தான் அழைக்கும் போதெல்லாம் தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வரவேண்டும் என்றும் வற்புறுத்தினார். இதனால் மணிமாலா அதிர்ச்சி அடைந்தார். நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating