மீண்டும் சிம்புவுடன் இணையும் சிலம்பாட்ட நாயகி..!!
சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்கதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா என்ற இரு வேடங்கள் தெரிய வந்துள்ள போதிலும், மூன்றாவது கதாபாத்திரத்தை மிகவும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், முந்தைய இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ஸ்ரேயா, தமன்னா ஆகியோரை ஹீரோயினாக நடித்துள்ளனர். மூன்றாவது கதாபாத்திரத்திற்கு யார் ஹீரோயின்? என்பதும் இதுவரை சஸ்பென்சாகவே இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்த நீது சந்திராதான் மூன்றாவது ஹீரோயின் என்று செய்தி வெளிவந்தது.
ஆனால், தற்போது சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சானாகான் தான் மூன்றாவது கதாநாயகி என்று செய்தி வெளியாகியுள்ளது. இதனை சானா கானும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சிம்பு நடித்து வரும் இப்படத்தின் டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் சிம்பு அளித்த பேட்டியில், இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை தாண்டி நான்காவதாகவும் ஒரு கதாபாத்திரம் இடம்பெறுகிறது என்று கூறிய செய்தி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.
Average Rating