ஏசுநாதரின் உண்மையான உருவம் இது தான்: பரபரப்பான புதிய கண்டுபிடிப்பு..!!

Read Time:2 Minute, 12 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90கிறித்துவ கடவுளான ஏசுநாதரின் உண்மையான உருவம் பதியப்பட்ட புராணக் காலத்து நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கத்திய நாடுகளில் அதிகளவில் வரையப்பட்ட ஓவியம் ஏசுநாதர் தான். பரந்த தலைமுடி, தாடி மற்றும் வெள்ளை நிற அங்கியுடன் தான் பெரும்பாலான ஓவியங்கள் அமைந்துள்ளன.

ஆனால், ஏசுநாதரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.

கிறித்துவ புனித நூலான பைபிளிலும் ஏசுநாதரின் உருவ அமைப்பு பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Ralph Ellis என்ற ஆய்வாளர் ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட வெங்கல நாணயத்தில் பதியப்பட்டுள்ள உருவம் தான் ஏசுநாதரின் உண்மையான தோற்றம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கி.பி முதல் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட இந்த நாணயத்தில் மட்டுமே ஏசுநாதரின் உண்மையான உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாக அவர் வாதாடுகிறார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாகவும் அவரது ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும், இதே உருவத்தில் முதல் நூற்றாண்டில் மன்னர் ஒருவர் வாழ்ந்ததாகவும், இது அவரது உருவமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என பிற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவினர் கற்பழித்ததால் கர்ப்பம்: மாணவி தீக்குளித்து தற்கொலை..!!
Next post மீண்டும் சிம்புவுடன் இணையும் சிலம்பாட்ட நாயகி..!!