தனிக்குடித்தனம் வரமறுத்த கணவன்: பெற்ற குழந்தையை கொலை செய்த மனைவி..!!
தனிக்குடித்தனம் வருவதற்கு கணவன் மறுத்ததால் பெற்ற குழந்தையையே மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் யோகமூர்த்திநாயுடு, இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், 6 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் குமாரி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று யோகமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதற்கு யோகமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தற்போது யோகமூர்த்தி பணியில் இருந்து சொந்த ஊருக்கு இரண்டு மாத விடுப்பில் வந்திருக்கிறார்.
அப்போது குமாரி மீண்டும் தனிக்குடித்தனம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் யோகமூர்த்தி மறுத்துவிட்டார்.
இதனால் ஆவேசமடைந்த குமாரி தனது குழந்தையை கழுத்தை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
குமாரி கிணற்றில் குதித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரியை காப்பாற்றியுள்ளனர். பின் யோகமூர்த்திநாயுடு பொலிசில் அளித்த புகாரின்பேரில் குமாரி கைது செய்யப்பட்டார்.
Average Rating