ரயில்களில் ஆண் நிர்வாண உடல் இருக்கை அறிமுகம்..!! (வீடியோ)
மெக்ஸிக்கோவில் பொதுப் போக்குவரத்து பயணத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் மீது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு ஒரு விந்தையான பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெக்ஸிக்கோவில் பொதுப்போக்குவரத்து பயணத்தின் போது 65 சதவீத பெண்கள் ஆதாவது, 10ல் 9 பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதை தடுக்கும் வகையில் மெக்ஸிக்கோ அரசு அதன் மெட்ரோ ரயில்களில் ஒரு புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில்களில் ஆண்களுக்கு மட்டும் என ஒரு சிறப்பு இருக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த இருக்கை ஆண் நிர்வாண உடல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இருக்கையில் அமர்வதின் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களை ஆண்களால் உணர முடியும் என பல ஆண்களே கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், அந்த இருக்கையை பார்த்தவுடனே ஆண்கள் தெறித்து ஓடி விடுகின்றனர்.
Average Rating