‘அதி மேதாவிகள்’ திரைப்படம்: அரியர்ஸ் மாணவர்களுக்கு சமர்ப்பணம்..!!

Read Time:1 Minute, 58 Second

201703312131437777_Adhi-Medhavigal-movie-for-arrear-students_SECVPFநட்பையும் நகைச்சுவையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கின்றது அதி மேதாவிகள். அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் இயக்கி இருக்கும் இப்படத்தை ‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் மால்காம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் பிரபல நிகழச்சி தொகுப்பாளர் சுரேஷ் ரவி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது(கோலி சோடா) மற்றும் `மாரி’ படப்புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து படத்தின் நாயகன் சுரேஷ் ரவி கூறியதாவது,

“நானும் ஒரு அரியர்ஸ் மாணவன் என்பதால், இந்த படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எல்லா அரியர்ஸ் மாணவர்களுக்கும் எங்களின் அதி மேதாவிகள் திரைப்படம் ஓர் சமர்ப்பணம் என்று உற்சாகமாக கூறுகிறார் கதாநாயகன் சுரேஷ் ரவி.

“பெற்றோர்களின் வற்புறுத்தலால் இரண்டு மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, படிக்க முடியாமல் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கின்றனர். அதை சரி செய்வதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பது தான் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதை. விரைவில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்..!!
Next post இந்த பெண் பொலிஸ் அவ்வளவு அழகா? கைது செய்யுங்கள் என பின்னால் சுற்றும் ஆண்கள்..!!