670 கோடி செலவில் தங்க முலாம் சட்டகமமைக்கும் டுபாய்..!!

Read Time:1 Minute, 36 Second

4554சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக சுமார் 670 கோடி செலவில் டுபாய் நகரின் மத்தியில், அரைவாசி ஈபிள் கோபுரத்தின் உயரத்தை ஒத்த தங்க முலாம் பூசப்பட்ட புகைப்பட சட்டகமொன்றை டுபாய் அரசு அமைத்துள்ளது.

தங்க முலாம் பூசப்பட்ட குறித்த புகைப்பட சட்டமானது, 160 மீற்றர் உயரத்திலும் 93 மீற்றர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் நகரின் முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கும் வகையில் குறித்த புகைப்பட சட்டகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய வடக்கு டுபாய் மற்றும் புதிய தெற்கு டுபாய் உள்ளிட்ட இரு நகர்ப்பகுதிகளின் தோற்றத்தை முழுமையாக குறித்த சட்டகத்திற்குள் புகைப்படமாக வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக டுபாய் மாநகர சபையால் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த புகைப்பட சட்டகத்தினுடாக வருடமொன்றிற்கு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப்பயனாளர்களை எதிர்பார்ப்பதாக மாநகர சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘பார்ட்டி’களுக்கு போகமாட்டேன்: நீது சந்திரா..!!
Next post பிறந்த 7 நாளில் பெண் குழந்தையை கோவிலில் வீசிவிட்டு சென்ற தாய்..!!