‘பார்ட்டி’களுக்கு போகமாட்டேன்: நீது சந்திரா..!!

Read Time:2 Minute, 22 Second

201704011601331952_neethu3._L_styvpfதமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருபவர் நீது சந்திரா. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே.ஹீரோவாக நடித்த ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

அந்த அனுபவம் குறித்து கூறிய அவர்…

“நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ‘விஷ்ணு’ என்ற தெலுங்கு படத்தில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் என்னை அறிமுகம் செய்தார். பல ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்தது சந்தோ‌ஷம். ‘எல்லாம் அவன் செயல்’ என்ற வெற்றி படத்துக்கு பின் ஷாஜி இயக்கும் படம் இது.

கொஞ்சம் முரட்டு குணமுள்ள அக்கா. அப்பாவியான தங்கை என இரண்டு வேடத்தில் நடித்ததை மறக்க முடியாது. இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்த எனக்கே சவாலாக இருந்தது. ரெயில் சம்பந்தப்பட்ட படம் என்பதால், ரெயிலை கவுரவிக்கும் வகையில் படக்குழு ஸ்டாம்ப் வெளியிட்டுள்ளது. அடிப்படையில் நான் பீகாரி. போஜ்புரி மொழியில் ‘தேஸ்வா’ என்ற படம் தயாரித்தேன். என் தம்பி நிதின் இயக்கினார். அந்த படத்துக்கு பல விருதுகள் கிடைத்தன. நான் தயாரித்த இன்னொரு படத்துக்கு ‘தேசிய விருது’ கிடைத்தது.

பெண்களை பொறுத்தவரை, தங்கள் உடல் நலத்தை பேண வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். நல்ல உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நான் நடிகையாக இருந்தாலும் பார்ட்டிகளுக்கு போவது இல்லை. புகை, மது பழக்கம் கிடையாது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பாக இருந்தாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியை செய்த காரியம்..!!
Next post 670 கோடி செலவில் தங்க முலாம் சட்டகமமைக்கும் டுபாய்..!!