முதலிரவில் ஆண்கள் எப்படித்தான் நடந்துக்கணும்?…!!

Read Time:4 Minute, 28 Second

201703301932426061_how-should-men-behave-the-first-night_SECVPF-333x250திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஆண், பெண், இருவரும் கணவன்-மனைவியாக மாறிய பின் திருமண நாள் இரவில் கூடுவதை சாந்தி முகூர்த்தம் அல்லது முதலிரவு என்கிறோம். முதலிரவு என்றவுடன் பால், பழம், பூக்கள் தூவிய கட்டில் இது தான் பொதுவாக ஞாபகத்துக்கு வரும்.

சினிமா பார்த்தே இந்த மனோபாவம வந்துவிட்டது.

ஆனால் இன்றைய ஹைடெக் உலகில் தாம்பத்தியம், இல்லறம், உறவு குறித்து இருபாலரும் நன்றாகவே அறிந்து கொண்டுள்ளனர். முதல் முதலில் ஒரு பெண்ணை தொடும்போது, ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அந்த பெண் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார் என்பதை பெரும்பாலான ஆண்கள் யோசிப்பதில்லை.

கரும்புக்காட்டுக்குள் புகுந்த யானை மேய்ந்ததைப் போல் துவம்சம் செய்துவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா?

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால், இருவரும் அடிக்கடி ஒன்றாக சந்தித்து பேசி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்திருக்காது. எனவே முதலிரவில் மனைவியானவள் தனது கணவனிடம் மனம் விட்டு பல விஷயங்களை பேச ஆசைப்படுவாள்.

தன்னுடைய உறவுகள், தனக்கு எது பிடிக்கும், இருவருக்கும் இடையிலான பழக்க வழக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்க பெண் ஆசைப்படுவாள்.

திருமணம் நடந்த அன்று இரவே முதலிரவு என்பதால் அன்று நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை கணவனிடம் கூற விரும்புவாள்.

ஏற்கனவே போனில் பலமணி நேரம் மொக்கை போட்டிந்தாலும், கூச்சம் அதிகமாகவே பெண்களுக்கு இருக்கும்.

சில பெண்களுக்கு தாம்பத்தியம் என்றால் என்ன? அதற்கு எப்படி தயாராக இருக்கவேண்டும் என்பது பற்றி முழுமையாக தெரிவதில்லை. எனவே உங்கள் மனைவிக்கு இல்லறம் குறித்த விஷயங்கள் குறித்து முழுமையாக தெரியாவிட்டால் கொஞ்சம் எடுத்துக் கூறுங்கள்.

உங்கள் மனைவி மீதான காதலை வெளிப்படுத்துங்கள். உங்கள் மீது அவர்களுக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். சிறுசிறுசீண்டல்களுடன் விளையாட்டை ஆரம்பியுங்கள் ஆனால் உங்கள் மனைவி இன்று தாம்பத்தியம் வேண்டாம் என்றால், விளையாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் தயாராக இருக்கிறார் என்றால் மட்டும் மீண்டும் தாம்பத்தியத்தை ஆரம்பியுங்கள்

பெண்களை மென்மையான சீண்டல்களே அவர்களை இன்பத்தில் மூழ்கடிக்கும். அவர்கள் உணர்வு ரீதியாக மென்மையானவர்கள்.எனவே அவர்களை நசுக்கிவிடாமல் பொறுமையாக காதல் சேஷ்டைகளில் ஈடுபடுங்கள். அதன் பிறகு உங்கள் சீண்டல்களை அதிகப்படுத்துங்கள்.

உறவின்போது சில பெண்கள் அதிகம் வலிப்பதாக கூறுவார்கள். அதுபோன்ற சமயங்களில் மனம்விட்டு பேசி தாம்பத்தியத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளை எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள்.

முதலிரவில் எப்படி நீங்கள் நடந்து கொண்டீர்கள் என்பதை நீங்களும் மறக்க மாட்டீர்கள், உங்கள் மனைவியும் மறக்க மாட்டார். எனவே உங்கள் முதலிரவை இன்பமயமாக மாற்றுவதற்கான சூழல்களை நீங்கள் தான் உருவாக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரோஸ் லிப்ஸ் வேணுமா இதப்படிங்க..!!
Next post நள்ளிரவில் இளம்பெண்ணை மனித மிருகத்திடமிருந்து காப்பாற்றிய இளைஞர்: நெகிழ வைக்கும் வீடியோ..!!