நள்ளிரவில் இளம்பெண்ணை மனித மிருகத்திடமிருந்து காப்பாற்றிய இளைஞர்: நெகிழ வைக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 54 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90நள்ளிரவில் தனியாக சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளைஞர் ஒருவர் அடித்து விரட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது.

நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு பெண், தன்னுடைய நண்பருக்காகச் சாலை ஓரத்தில் காத்திருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில், அந்தப் பெண்ணைக் கடந்துசென்ற வாலிபர் ஒருவர் அவருக்கு அருகே சென்று, உன் விலை என்ன எனக் கேட்டுள்ளார்.

அதன்பிறகு, தெருவில் யாரும் இல்லாததைப் பார்த்து பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார். இதனையடுத்து, அந்த இடத்தைக் கடந்த ஓர் இளைஞர், அங்கு நடந்த சம்பவத்தைப் பார்த்தபிறகு, அந்த வாலிபரை அடித்துள்ளார். இதை, அந்தப் பெண் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.

இதை பேஸ்புக்கில் பதிவிட்டவர் கூறியிருந்த தகவல்படி, பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரின் வாகனத்தில் பொலிஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அவர் பொலிசாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அந்த வீடியோவில், ஒரு பெண் தனியாக நின்றுகொண்டிருந்தால்… அந்தப் பெண்ணிடம் விலை கேட்பாயா’ என்று அந்த வாலிபரை அடித்தபடியே கேட்டிருந்தார் பெண்ணைக் காப்பாற்றிய இளைஞர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவில் ஆண்கள் எப்படித்தான் நடந்துக்கணும்?…!!
Next post குரங்குகளால் வளர்க்கப்பட்ட எட்டு வயதுச் சிறுமி மீட்பு..!!