சிகரெட்டை அணைக்க மறுத்த நபர்: சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகள்..!! (வீடியோ)
ஜேர்மனி நாட்டில் சிகரெட்டை அணைக்க மறுத்த நபர் ஒருவரை 4 பொலிஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Stuttgart நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19-ம் திகதி இரவு 4 பொலிசார் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
அப்போது, சாலை ஒன்றில் கார் விபத்துக்குள்ளாகி நின்றுள்ளது. காரின் ஓட்டுனரை சந்திக்க பொலிசார் அங்கே சென்றுள்ளனர்.
பொலிசார் வரும்போது காரின் ஓட்டுனர் சிகரெட் ஒன்றை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். பொலிசாரை பார்த்த பின்னரும் அவர் சிகரெட்டை கீழே போடவில்லை.
நபரை பார்த்த பொலிசார் ‘சிகரெட்டை கீழே போடுமாறு’ கூறியுள்ளனர். ஆனால் நபர் அதனைக் கண்டுக் கொள்ளாமல் மீண்டும் சிகரெட்டை பிடித்துள்ளார்.
நபரின் செயலால் ஆத்திரம் அடைந்த பொலிசார் அவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 4 பொலிசாரும் ஒன்றாக தாக்கியதால் நபரால் எதிர்க்க முடியவில்லை.
இக்காட்சியை வாலிபர் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். எனினும், காயமடைந்த நபரின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
இக்காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பொலிசாரை காவல் நிலையத்திலேயே பணி செய்யுமாறு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், மற்ற இரண்டு பொலிசார் மீது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating