அசிங்கமா திட்டுனாங்க.. கடைசியா கூட பார்க்க விடலையே! கதறும் நந்தினி..!!
பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி தனது கணவர் கார்த்திக் தற்கொலை தொடர்பாக வலைதள ஊடகமொன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
பிரபல தொலைகாட்சி நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
தன் மரணத்துக்கு தனது மாமனார் தான் காரணம் எனவும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.
இதுகுறித்து நந்தினி கூறுகையில், கார்த்திக் இப்படி ஒரு நிலைக்கு ஆனதை என்னால் தாங்கிகொள்ளமுடியவில்லை.
அவர் குடும்பத்தை என் குடும்பமாக தான் பார்த்தேன், கார்த்திக்கை கடைசியாககூட பார்க்க அவர் குடும்பம் என்னை அனுமதிக்கவில்லை. அசிங்கமாக திட்டி என்னை அனுப்பி விட்டார்கள்.
வெண்ணிலா என்பவருக்கு ஏற்கனவே ஜான் என்பவருடன் திருமணமாகியுள்ளது. வெண்ணிலாவுக்கும் கார்த்திக்கும் தொடர்பு இருந்துள்ளது.
வெண்ணிலா தற்கொலைக்கு காரணம் இவர் தான் என சொல்லப்படுகிறது. அவர் சேலம் அபிநயாவை காதலித்தார் என இப்போது தான் எனக்கு தெரியவந்தது.
நான் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். என் அப்பாவும், அம்மாவும் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள், அவர்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன், நான் அவர்களை பார்த்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
Average Rating