ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்..!!
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன். இவர் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் பல படங்களை இயக்கவும் செய்துள்ளார்.
இவரது மகன் தியான் ஸ்ரீனிவாசன். இவரும் சமீபத்தில் வெளியான `திரா’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் என்ஜினீயராக பணிபுரியும் அர்பிதா செபாஸ்டின் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து கண்ணூரில் உள்ள கிளப் ஹவுசில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாசனின் மனைவி விமலா, மணமகள் அர்பிதா செபாஸ்டியனின் தந்தை செபாஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.
நடிகர் ஸ்ரீனிவாசனின் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் திருமண சடங்கில் பயன்படுத்தப்பட்டன. திருமண விருந்திற்கும் அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளே பயன்படுத்தப்பட்டன.
Average Rating