சீரியலில் நடித்தால் தற்கொலை செய்வேன்- மிரட்டிய மனைவி..!! (வீடியோ)
நடிகர் போஸ் வெங்கட் என்றால் தெரியாத பெண்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் நடித்த மெட்டிஒலி நாடகம் அவ்வளவு ஃபேமஸ்.
இந்நிலையில், தொலைக்காட்சியில் இருந்து, சற்று உயர்ந்து, சினிமாவில் பல படங்களில் கால் பதித்தார். ஆனால், சினிமாவில் அவர் பெயர் அந்த அளவில் மக்கள் மனதில் இடம்பெற வில்லை.
ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வில்லன் சுமனுக்கு உதவியாளராக நடித்தார். இருப்பினும் இவரது பெயர் சொல்லும் அளவுக்கு கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
கே.வி.ஆனந்த் கோ படத்தில் நல்ல வேடம் ஒன்று கொடுத்திருப்பார். தற்போது அதே கே.வி.ஆனந்த் மீண்டும் கவண் படத்தில் போஸ் வெங்கட்டுக்கு தீரன் என்ற பக்கா லோக்கல் அரசியல்வாதி கதாபாத்திரம் கொடுத்திருந்தார்.
இந்த கதாபாத்திரத்தை மக்கள் வெகுவாக ரசித்துள்ளனர், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆனாலும், இந்த வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சினி உலகம் ஊடகத்திற்கு அவர் கொடுத்த பிரத்யேக பேட்டியில், விரிவாக கூறியுள்ளார்.
அப்பொழுது, சினிமா தான் வாழ்கை என்று இருந்த போஸ்க்கு ஒரு கஷ்டமான கட்டத்தில் மீண்டும் சீரியல் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேக்கப் லாம் போட்டு கொண்டு ரெடியாக இருக்க, அவரது மனைவி நீங்கள் சீரியல் நடிக்க சென்றால் நான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டி என் மனைவி என்னை சீரியலில் நடிக்கவிடாமல் தடுத்தார் என உருக்கமாக கூறியுள்ளார்.
Average Rating