ஜெய் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி..!!

Read Time:2 Minute, 15 Second

201704081118067159_Anjali-Shocking-appearence-on-jai-birthday_SECVPFஜெய் தற்போது `பலூன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இறுதிகட்டத்ததை எட்டியுள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பிறந்தநாளை, நேற்று முன்தினம் பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார்.

சினிஷ் இயக்கத்தில், உருவாகி வரும் இப்படத்தை ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் `பலூன்’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பலூன் படப்பிடிப்பு தளத்தில், ஒட்டுமொத்த படக்குழுவினரோடும் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதில் ஜெய் மற்றும் படக்குழுவினருக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கும் விதமாக, `பலூன்’ படத்தின் கதாநாயகி அஞ்சலி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெய்யை வாழ்த்தினார்.

ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வரைவத்தார் இயக்குநர் சினிஷ். படக்குழுவினர் அனைவரும் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனக்கொலையை வீரமாக சித்திரிப்பவர்களிடம் நீதியை பெற இயலாது..!! (கட்டுரை)
Next post ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது?..!! (வீடியோ)