லண்டனில் பயங்கரம்! சாலையில் சென்ற கணவன் மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு..!!

Read Time:1 Minute, 39 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)லண்டனில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் அவர்கள் குழந்தை மீது மர்ம நபர் ஆசீட் வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சீனாவை சேர்ந்த கணவன், மனைவி வசித்து வருகிறார்கள்.

இருவரும் நேற்று தங்கள் இரண்டு வயது மகனை அழைத்து கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களருகில் வந்த ஒரு மர்ம நபர் தன் கையில் வைத்திருந்த ஆசிட்டை கணவர் முகத்தில் ஊற்றி விட்டு தப்பியோடியுள்ளார்.

ஆசிட் தெளித்து அருகிலிருந்த மனைவி மற்றும் மகன் மீதும் லேசாக பட்டது.

வலியால் துடித்த அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மனைவி மற்றும் மகனுக்கு சிறுகாயம் மட்டுமே ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகினர். கணவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் வருகிறார்கள். லண்டனில் கடந்த 2015ல் 261ஆக இருந்த ஆசிட் வீச்சு சம்பவம் தற்போது 454ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில்: இளைஞர்கள், பொலிஸாருக்கிடையில் முறுகல்…!!
Next post உயர் தரத்தில் 3ஏ சித்திகளை பெற்று முச்சக்கரவண்டி ஓட்டு இலங்கை மாணவர்கள்…!!