கிளிநொச்சியில்: இளைஞர்கள், பொலிஸாருக்கிடையில் முறுகல்…!!

Read Time:3 Minute, 24 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90 (1)கிளிநொச்சி புதுமுறிப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை பலியாகியுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதிர் இலக்கம் ஏழு அக்கராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் வயது 67 என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.

இறந்தவரின் உடல் எலும்பு துண்டுகள் சம்பவ இடத்தில் காணப்படுகிறது.

குறித்த பஸ்ஸில் போதியளவு பிரேக் இன்மையே விபத்துக்கு காரணம் எனவும் நேற்று சனிக்கிழமை குறித்த பஸ் பிரேக் போதியளவு இன்மையால் மரம் ஒன்றுடன் மோதியதாகவும், ஒரு வருடத்திற்கு முன்னர் ஸ்கந்தபுரம் பகுதியில் இதே பஸ் ஒருவரை மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இன்றைய தினமும் ஒருவர் பலியானதை தொடர்ந்து ஒன்று திரண்ட பிரதேச இளைஞர்கள் சாலை முகாமையாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கடிதம் மூலம் குறித்த பஸ் இனி சேவையில் ஈடுபடுத்தமாட்டோம் என உறுதிமொழி வழங்கிய பின்னரே பஸ்ஸை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனத் தெரிவித்து எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் இளைஞர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட்ட போதும் அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொசான் ராஜபக்ஷ வருகை தந்து எதிர்ப்பில் ஈடுபட்ட இளைஞர்களுடன் சாதுரியமாக சமரச முயற்சியில் ஈடுபட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதன் போது பொலிஸார் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்களை தொலைபேசியில் வீடியோ எடுத்ததோடு, உதவி பொலிஸ் அத்தியட்சரால் வித்தியா கொலை வழக்கில் எதிர்ப்பில் ஈடுப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கூறியும் இளைஞர்களின் எதிர்ப்பை கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில் கலகம் அடக்கும் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு மேலாக உச்சம் கொள்ளும் சூரியன்…!!
Next post லண்டனில் பயங்கரம்! சாலையில் சென்ற கணவன் மனைவி முகத்தில் ஆசிட் வீச்சு..!!