தேசிய விருது தேர்வுக்குழு மீது ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பாய்ச்சல்..!!

Read Time:1 Minute, 48 Second

201704141254108963_AR-Murugadoss-again-fight-with-National-Award-selection_SECVPF2016-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பல தமிழக தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வாகியிருந்தனர். தேசிய விருதுகள் தேர்வு சிலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்திருந்தது.

இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் தனது அதிருப்தியை தெரிவித்தார். தேசிய விருதுகளுக்கான நபர்கள் ஒருதலைபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தேர்வு குழுவில் இருந்த பிரியதர்ஷனும் விளக்கம் கூறியிருந்தார்.

இந்நிலையில், தேசிய விருதுகள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் ஒரு கருதை முன்வைத்துள்ளார். அதாவது, தேசிய விருதுகள் குறித்து நான் கூறியது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து. வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்று மறுபடியும் நடுவர் குழுவினரை சாடியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாசின் இந்த கருத்தால் மீண்டும் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே அதிக விலை உயர்ந்த திரவம் எது என்று உங்களுக்கு தெரியுமா??..!!! (வீடியோ)
Next post தண்ணீர் குடிப்பதற்கு கிணற்றுக்கு சென்ற 3 சிறுவர்கள் பலி..!!