தண்ணீர் குடிப்பதற்கு கிணற்றுக்கு சென்ற 3 சிறுவர்கள் பலி..!!

Read Time:1 Minute, 44 Second

threeகர்நாடகாவில் தண்ணீர் குடிப்பதற்காக தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இறங்கிய 3 சிறுவர்கள் தவறி விழுந்து பலியானார்கள்.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுரா பகுதியை சேர்ந்த விஜய், கணேஷ், அஜய் ஆகிய 3 பேரும் நண்பர்கள்.

இந்த 3 சிறுவர்களும் நேற்று அஜயின் பாட்டி யமுனாபாய் வுடன் அங்குள்ள ஒரு விவசாய தோட்டத்திற்கு சென்றனர்.

இந்த தோட்டம் சிறுவன் அஜயின்தாத்தாவுக்கு சொந்தமானதாகும்.

தோட்டத்திற்கு சென்ற சிறுவர்கள் 3 பேருக்கும் தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தண்ணீர் குடிப்பதற்காக சிறுவர்கள் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இறங்கியுள்ளனர்.

அப்போது கால் தவறி எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்து 3 பேரும் நீரில் தத்தளித்தனர்.

சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாராயணபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீரில் மூழ்கி பலியான 3 சிறுவர்களுடைய உடல்களையும் மீட்டு யாதகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய விருது தேர்வுக்குழு மீது ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பாய்ச்சல்..!!
Next post ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்த வாலிபர் கைது..!!