மருமகள் தனிக்குடித்தனத்துக்கு வற்புறுத்தியதால் தறி தொழிலாளி மனைவியுடன் தற்கொலை..!!

Read Time:3 Minute, 40 Second

201704142159241675_Daughter-in-law-forced-separate-family-loom-worker-suicide_SECVPFசேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய வனவாசியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). தறித்தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (48). இவர்களது மகன் தண்டபாணி (28).

இவருக்கும் சேலம் களரம்பட்டியை சேர்ந்த தேவி (22) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. சந்தோ‌ஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் தனிக்குடித்தனம் என்ற கோணத்தில் புயல் வீச ஆரம்பித்தது.

தேவி, தண்டபாணியிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என அடிக்கடி வற்புறுத்தியதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்துக்கொண்டு தேவி தந்தை வீட்டிற்கு சென்று விடுவார். பினனர் சில நாட்கள் கழித்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் கோபித்து கொண்டு தேவி களரம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மருமகளின் நிலையால் மனவேதனை அடைந்த மாமனார் சுப்ரமணி, மாமியார் சரோஜா மற்றும் கணவர் தண்டபாணி ஆகிய 3 பேரும் வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து தண்டபாணி, சுப்பிரமணி, சரோஜா ஆகிய 3 பேரும் தென்னை மரத்திற்கு பயன் படுத்தப்படும் வி‌ஷ மாத்திரையை தின்று வீட்டில் மயங்கி கிடந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறினர். பின்னர் 3 பேரையும் மீட்டு ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பிரமணி, சரோஜா ஆகிய 2 பேரும் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுது புலம்பினர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டபாணி உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நங்கவள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 60 கோடி பங்களாவில் வசிக்கும் பேய்..!!
Next post முதல் மனைவியை மறக்க இரண்டாவது மனைவி செய்த செயல்: காதல் பானத்தால் அவதிப்பட்ட கணவர்..!!