என் மகன் நிலை தான் உங்களுக்கும்..கோமா நிலைமைக்கு தள்ளப்பட்ட மகன்: தாய் வைத்த உருக்கமான கோரிக்கை..!!

Read Time:3 Minute, 17 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90அயர்லாந்தில் 16 வயது இளைஞர் ஒருவர் வலி நிவாரணிக்காக மருத்துவர் பரிந்துரை இன்றி லிரிக்கா என்ற மருந்தை சாப்பிட்டதால் அவர் கோமாநிலைமைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் மேற்கு பெல்பாஸ்ட் பகுதியின் Shankill பகுதியைச் சேர்ந்தவர் Geordie Brown (16). இந்த இளைஞர் அண்மையில் கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டு, சுமார் 24 மணி நேரம் கோமா நிலையில் இருந்துள்ளார்.

அதன் பின் தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சையின் பயனாக அந்த இளைஞன் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார்.

இது குறித்து அந்த இளைஞன் மருத்துவமனையில் எந்த நிலைமையில் இருந்தானோ அது தொடர்பான புகைப்படத்தை அவரது தாயார் Jane பதிவிட்டு ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.

அதில் தன் மகன் வலிநிவாரணிக்காக லிரிக்கா என்ற மருந்தை எந்த ஒரு மருத்துவரின் அறிவுரையின்றியும், அவனாக எடுத்துள்ளான். ஆனால் தற்போது அவன் கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டு, அதிர்ஷ்டவசமாக நினைவுக்கு திரும்பிவிட்டான்.

இதை உண்மையிலே தன்னால் மறக்க முடியாது. இது தனக்கு மட்டுமல்ல அனைத்து பெற்றோருக்கும் தான் கூற விரும்புகிறேன். தொலைக்காட்சிகள், வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் இண்டநெட் போன்றவைகளில் வருபவற்றை நம்பி யாரும் வாங்கி சாப்பிட வேண்டாம்.

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரைப் படியே வாங்கிக்கொள்ளுங்கள் அது தான் நல்லது. இது ஒரு விளையாட்டு கிடையாது, மேலும் இது போதையாக இருக்கும் என்று பயன்படுத்துகின்றனர்.

இது வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இது இன்று தன் மகனின் உயிரை பறிக்க நேர்ந்தது. ஆனால் என் மகன் அதிர்ஷ்டக்காரன், இது போல் அனைவருக்கும் இருக்குமா என்று சொல்ல முடியாது.

அதனால் பெற்றோர்களே கவனமாக இருங்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் மகன்கள் போன்றோர்களை இந்த போதை ஏற்றும் வலி நிவாரணி மருந்தை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்னரே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மருந்து தொடர்பான புகைப்படம் அவர் வெளியிட வில்லை என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை பிஞ்சு..!!
Next post உங்களுக்கு விருப்பமான டிசைனில் 3டி சொக்லேட்..!!