லண்டன் இரவு விடுதியில் மர்ம நபர் அமில வீச்சு: 12 பேர் படுகாயம்..!!

Read Time:1 Minute, 48 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான இரவு விடுதி ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அமில வீச்சு நடத்தியதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிழக்கு லண்டனில் அமைந்துள்ள Mangle E8 என்ற இரவு விடுதியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்களில் குறைந்தது 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த விடுதியில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு 600 பேர் அங்கு கூடியிருந்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் காரத்தன்மை கொண்ட பொருள் ஒன்றை எடுத்து பொதுமக்கள் மீது வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த பகுதிக்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். பெண் ஒருவருக்கு முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொலிசார் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 12 பேர் இச்சம்பவத்தில் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரையும் பொலிசார் கைது செய்யப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் துணிக்கடையில் தாயும் மகளும் செய்த அசிங்கம்..!! வீடியோ
Next post எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி..!!