எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி..!!
தமிழ் சினிமாவில் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். எந்தவித வேடங்களிலும் நடிக்கும் இவர் பல படங்களில் கவுரவ வேடங்களிலும் நடிக்கிறார். ‘கடுகு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.
இப்போது, தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் சாந்தினி எழுத்தாளராக நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர்…
‘ரங்குஸ்கி’ என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்த படத்தில் நான் ஒரு தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது நகர்புறத்து பெண் வேடம். இதுவரை நான் நடித்த பாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த படத்தில் ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகன் ஷிரிஷ். இவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இதுதவிர பலவிதங்களிலும் உறுதுணையாக இருந்து வருகிறார். ‘ராஜா ரங்குஸ்கி’ அனைவரும் விரும்பும் படமாக இருக்கும் என்றார்.
Average Rating