லிபிய கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்பு..!!

Read Time:1 Minute, 21 Second

95661593_hi039007377லிபிய கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வௌ்ளிக்கிழமை 2,000 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3000 பேர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய கரையோர பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கையொன்றின் போது கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் 1500 புகலிடக்கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்போது சுமார் 7 பேர் வரை கடலில் மூழ்கியுள்ளதாகவும், பலியானோரில் 8 வயது சிறுவனும் அடங்குவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள் நேற்று மாலை வரை இடைவிடாது முன்னெடுக்கப்பட்டதாக மீட்புக்குழு கூறியுள்ளது.

வசந்தகாலம் ஆரம்பித்துள்ளமையின் காரணமாக சட்டவிரோத கடற்பயணங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி..!!
Next post அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை..!!