2 பூண்டு மட்டுமே.. வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்..!!
சமைக்கும் போது உணவுகளில் நறுமணம் மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் பூண்டை தினமும் வெறும் வயிற்றில், சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்.
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறைப்பதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நல்ல நிவாரணம் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
பச்சை பூண்டை சாப்பிட்டால், அது கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை சீராக்கி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே தினமும் 2 பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ரத்த அழுத்தம் அதிகரிப்பதை குறைந்து, இதய நோய் ஏற்படுவதை தடுத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால், அது காச நோய், நிமோனியா, நெஞ்சு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
குறிப்பு
தினமும் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 2 பூண்டு பல் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
Average Rating