கலையரசனுக்கு ‘எய்தவன்’ பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை..!!

Read Time:1 Minute, 53 Second

201704191522067206_Director-Sakthi-Rajasekaran-trust-Yeidhavan-best-movie-for_SECVPFகலையரசன் – சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘எய்தவன்’. இப்படத்தை சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். ஆடுகளம் நரேன், வேலா ராமமூர்த்தி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், சான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பார்தவ் பார்கோ இசையமைத்துள்ளார். பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் சக்தி ராஜசேகரன் கூறும்போது, இன்றைய சூழ்நிலையில் வசதியானவர்களுக்கும், ஏழைகளுக்கும் கல்வி என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அந்த கல்வியால் பாதிக்கப்படுவர்களை மையப்படுத்திய உருவாகியுள்ள படம்தான் ‘எய்தவன்’.

இப்படத்தில் கலையரசன், சாத்னா டைட்டஸ் உள்ளிட்ட மொத்தம் 16 கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறன. இந்த 16 கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்படி கதையை அமைத்துள்ளோம்.

கலையரசன் இதுவரை சினிமாவில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருப்பினும், ஹீரோவாக இந்த படம் அவருக்கு பேசக்கூடியதாக அமையும். அந்தளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பானதாக அமைந்துள்ளது. காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. விரைவில் திரைக்கு வரவிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கால்பந்து விளையாட்டில் பாலியல் வன்கொடுமையால் 560 பேர் பாதிப்பு..!!
Next post கோடைக்கு இதம் தரும் தயிர் ஒரு மருந்தும் கூட…!!