ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்..!!

Read Time:1 Minute, 39 Second

201704201243325189_Oman-minister-wish-to-Udhayanidhi-Stalin-Ippadai-Vellum_SECVPF‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தை இயக்குகிறார். படத்தில் இடம்பெரும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்கு படக்குழுவினர் சென்றனர்.

தனது நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை அமைச்சர் மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, இப்படத்தின் பாடல் காட்சிகளை பார்த்த ஓமன் நாட்டின் அமைச்சர் மர்வான் யூசுப் இயக்குனர் கௌரவ் நாராயணன் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

‘இப்படை வெல்லும்’ படத்தில் ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பார்வதிபுரம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை..!!
Next post இயற்கை தரும் கோடை பாதுகாப்பு வெள்ளரிக்காய்..!!