காதலை துண்டித்தால் ஆத்திரம்: காதலியை எரித்து விட்டு தானும் தீக்குளித்த காதலன்..!!
தமிழ்நாட்டில் காதலை துண்டித்ததால் காதலியை எரித்து கொலை செய்து விட்டு, தீக்குளித்து இறந்துள்ள காதலனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (21). இவர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
அதே துணிக்கடையில் மைதிலி (20) என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார்.
பார்த்திபனுக்கும், மைதிலிக்கும் காதல் ஏற்ப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டாண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பார்த்திபனுக்கு ஏற்ப்பட்ட விபத்தில் அவர் கால் முறிந்தது.
இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதன் காரணமாக பார்த்திபன் மற்றும் மைதிலி சந்திப்பதும், அவர்கள் பேச்சு வார்த்தையும் நின்று விட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் மைதிலியை சந்தித்து பார்த்திபன் தன் காதலை மீண்டும் சொன்ன போது அதை ஏற்க மைதிலி மறுத்துள்ளார்.
இதையடுத்து நேற்று இரவு மைதிலி வேலையை விட்டு வீடு திரும்பும் போது வழிமறித்த பார்த்திபன் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உன்னை கொளுத்தி விடுவேன் என தான் வைத்திருந்த மண்எண்ணையை காட்டியுள்ளார்.
இதை மைதிலி அலட்சியபடுத்தவே, ஆத்திரமடைந்த பார்த்திபன் மைதிலி மீது மண்எண்ணையை ஊற்று கொளுத்தி விட்டு தானும் கொளுத்தி கொண்டார்.
இருவரும் அலறுவதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனில்லாமல் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating