கட்டுப்பாட்டை இழந்த கப்பல்: பாலம் மீது பயங்கரமாக மோதிய நேரடி காட்சிகள்..!! (வீடியோ)
ஸ்பெயின் நாட்டில் பயணிகள் கப்பல் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலம் மீது பயங்கரமாக மோதிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் உள்ள Gran Canaria பகுதியில் இருந்து Tenerife தீவிற்கு The Naviera Armas என்ற கப்பல் நேற்று புறப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 140 பயணிகள் மற்றும் கப்பல் சிப்பந்திகள் இதில் பயணம் செய்துள்ளனர்.
துறைமுகத்தை விட்டு சில மைல்கள் தூரம் சென்றதும் திடீரென கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கொண்டு பயணம் செய்யாமல் கப்பலை அதிகாரிகள் துறைமுகத்திற்கு திருப்பியுள்ளனர்.
ஆனால், கப்பலின் செயல்பாடு நின்றுபோனதால் கப்பலை கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை.
வேகமாக சென்ற கப்பல் வாகனங்கள் சென்றுக்கொண்டுருந்த பாலம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி நின்றுள்ளது.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், 13 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பட்டனர்.
கப்பல் பாலம் மீது மோதியதால் அதில் இருந்த எரிவாயு எண்ணெய் கடல் நீரில் சுமார் 3 கி.மீ தூரம் வரை பரவியுள்ளது.
இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு இப்பகுதி முழுவது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கப்பல் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் கப்பல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating