கறி இல்லாததால் நின்று போன திருமணம் – மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்..!!

Read Time:2 Minute, 11 Second

201704271751212908_upmaa._L_styvpfஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டார். இதனால், மாநிலம் முழுவதும் இறைச்சி தட்டுப்பாடு நிலவியது. சில பகுதிகளில் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வரும் கடைகளில் இறைச்சி விலை தாறுமாறாக எகிறியது.

இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டத்திலுள்ள குல்ஹெடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களின் போது எருமைக் கறி பறிமாறுவது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் சைவ உணவு மட்டுமே விருந்தில் இடம் பெற்றது.

விருந்தில் சைவ உணவு பறிமாறப்பட்டதை கண்டு ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண் வீட்டாரிடம் தகறாறு செய்துள்ளனர். மணப்பெண்ணின் குடும்பத்தினர் சூழ்நிலையை விளக்கி கூறியும் அதை மாப்பிள்ளை வீட்டார் ஏற்காததால், அந்த மாப்பிள்ளையுடன் திருமணம் வேண்டாம் என மணப்பெண் முடிவெடுத்தார்.

மணப்பெண்ணின் முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைய, திருமண விழாவிற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் அதே பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த இளைஞனின் விண்ணப்பத்தை அப்பெண்ணும், ஊராரும் ஏற்றுக் கொண்டதால் சைவ விருந்துடன் இனிதே திருமணம் நடைபெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல்லைமீறிய கவர்ச்சி: 1 வருடம் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்ட நடிகை..!!
Next post பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்..!!