படுக்கையில் உங்களுடைய காதலி மற்றொரு நபருடன் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..!!

Read Time:3 Minute, 23 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி ஒருவர் வீரர்கள் மத்தியில் எழுப்பிய கேள்வி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது அவர்களின் வீரத்தையும் எதிரிகளை வீழ்த்தும் தைரியத்தையும் வெளிப்படுத்த உணர்ச்சிகரமான வார்த்தைகளை உயர் அதிகாரிகள் பயன்படுத்துவார்கள்.

ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டில் உயர் ராணுவ அதிகாரி ஒருவரின் உணர்ச்சிகரமான வார்த்தைகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் சுவிஸ் ராணுவ வீரர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் பயிற்சி அளித்துள்ளார்.

அதில் வீரர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு தரையில் படுத்திருக்கும்போது உயர் அதிகாரி ஒருவர் உணர்ச்சிகரமான கட்டளைகளை வெளியிடுகிறார்.

அப்போது, ‘நீங்கள் வீட்டிற்கு திரும்பும்போது படுக்கையில் உங்களது காதலி மற்றொரு நபருடன் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு ‘இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் காதலியை சுட்டுக்கொன்று விடுவோம்’ என வீரர்கள் பதிலளித்துள்ளார்.

வீரர்களின் பதிலால் உற்சாகம் அடைந்த அந்த உயர் அதிகாரி’ மிகச் சரியாக சொன்னீர்கள். இதே கோபத்துடன் காதலியாக உள்ள உங்களது எதிரிகளையும் நீங்கள் இப்படி தான் சுட்டுக் கொல்ல வேண்டும்’ என உயர் அதிகாரி கட்டளையிடுகிறார்.

உயர் அதிகாரி கூறியதும் வீரர்கள் அனைவரும் தங்களுக்கு முன்னால் உள்ள இலக்குகளை குறித்து வைத்து சுடுகின்றனர்.

இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளரான Daniel Reist என்பவர் பேசியபோது, ‘உயர் அதிகாரி ஒருவர் தனது ராணுவ வீரர்களுக்கு இதுபோன்று வார்த்தைகளால் பயிற்சி அளித்துள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இதனால் வெளிநாடுகளின் மத்தியில் சுவிஸ் ராணுவத்தின் மதிப்பு இழந்துவிடும்.

வீடியோவில் பேசியுள்ள உயர் அதிகாரி யார் என விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் உயர் அதிகாரிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்’ என Daniel Reist தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா?..!! (கட்டுரை)
Next post பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்..!!