பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்..!!

Read Time:1 Minute, 28 Second

201704272129515428_Actor-Vinu-Chakravarthy-passed-away_SECVPFதமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், 74 வயதான நடிகர் வினு சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையில் உங்களுடைய காதலி மற்றொரு நபருடன் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..!!
Next post மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளி: உயிர் பிழைக்க வைத்த பொலிசார்..!!