காதலனுடன் ஓட்டம்: கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த பெற்றோர்..!!

Read Time:2 Minute, 26 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)தமிழ்நாட்டில் 7 மாதம் கர்ப்பமாக இருந்த பெண்ணை பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டதை சேர்ந்த தங்கராசு – பவானி தம்பதிகளின் மகள் சர்மிளா.

இவர் அப்பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரை காதலித்து வந்தார். சர்மிளாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2008ல் அவர் தனது காதலனுடன் தலைமறைவானார்.

பின்னர் சர்மிளாவை தேடி கண்டுபிடித்த அவர் பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த அன்புமணி என்பவரை அவருக்கு கட்டாயபடுத்தி திருமணம் செய்து வைத்தார்கள்.

இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், அன்புமணியுடன் வாழ பிடிக்காத சர்மிளா வீட்டை விட்டு வெளியேறி கடந்த நான்கு ஆண்டுகளாக தனது காதலன் கலைராஜுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கலைராஜூடன் குடும்பம் நடத்தியதில் சர்மிளா கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் அவரை திருமணமும் செய்துள்ளார்.

இதனிடையில் சர்மிளா கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவர் பெற்றோர் அவர் கருவை கலைக்க முயன்றுள்ளனர்.

இதற்கு அவர் ஒத்து கொள்ளாததால் சர்மிளாவை அவர் பெற்றோர் அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் மினி லொறியில் ஏற்றி பொன்பரப்பில் அவரது வீட்டிற்கு கொண்டு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்தது போல் நாடகம் ஆடியுள்ளனர்

இந்த சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சர்மிளாவை அவர் பெற்றோரே அடித்து கொலை செய்ததை கண்டு பிடித்துள்ளனர்.

இதையடுத்து தங்கராசும், பவானியும் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்..!!
Next post துணி இல்லாம வெளிய வருவியா? நிர்வாண சாமியாரை வெளுத்துக் கட்டிய இளைஞர்கள்…!! (வீடியோ)