14 வயது மாணவன் ஒருவன் செய்த துணிகர செயலை பாருங்கள்!! இது தேவைதானா? (வீடியோ)
அதிவேகமாக இரயில் வந்து கொண்டிருந்த போது, 14 வயது மாணவன் ஒருவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தின் படுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தனது சக நண்பர்களுடன் எகிப்தைச் சேர்ந்த 14-வயது மாணவன் ஒருவன் ரயில்கள் செல்லும் தண்டவாளப் பகுதிக்கு சென்றுள்ளான். அதன் பின்னர் அத்தண்டவாளத்தில் ரயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்த போது, திடீரென்று அந்த மாணவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தண்டவாளத்தில் படுத்துள்ளான்.
இதைத்தொடர்ந்து அவன் ரயிலிற்கும், தண்டவாளத்திற்கு மத்தியில் படுத்திருந்தான். ரயில் சென்ற பின் தன் சக நண்பர்களுடன் வழக்கும் போல் சிரித்துக் கொண்டு பேசி சென்றுள்ளான். இந்த செயலால் அவனை சக நண்பர்கள் பாராட்டினர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான இச்செயலுக்கு சமூகவலைத்தளங்களில் கண்ட சிலர் குறித்த மாணவன் ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறான்.
இது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் அந்த மாணவன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
Average Rating