‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்..!!

Read Time:2 Minute, 41 Second

201704291809261464_Some-interesting-things-about-Baahubali-2_SECVPFஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள `பாகுபலி 2′ உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 தியேட்டர்கள் என இந்தியா முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. இந்நிலையில் முன்பதிவில் நாளை வரை ரூ.240 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து அறிந்திராத சில ஸ்வாரஸ்ய தகவல்களாவன,

* `பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் பிரமாண்டத்துக்கு காரணம் அதில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்கிகள். 33 நிறுவனங்களில் இவை உருவாக்கப்பட்டன. 70 நிபுணர்கள் மேற்பார்வையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். 1 லட்சத்து 45 ஆயிரம் பிரேம்கள் இவர்களால் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன.

* ‘பாகுபலி-2’ படத்தை ‘பி.பி.சி’ தொலைக்காட்சி முதன் முறையாக ‘டாக்குமென்டரி’ படமாக தயாரித்து வெளியிடுகிறது. பாகுபலி படத்தின் கிராபிக்ஸ் துல்லியமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

* ‘பாகுபலி’ படத்தில் நடிப்பதற்காக பிரபாஸ், ராணா இருவரும் உடல் எடையை 30 கிலோ வரை அதிகரித்தனர். இதற்காக தங்களை 8 மாதங்கள் தயார் செய்தனர். இதற்காக உடற்பயிற்சி செய்தவற்காக பிரபாஸ் அவரது வீட்டில் ரூ. 1.5 கோடி செலவில் ‘ஜிம்’ அமைத்தார்.

* ‘பாகுபலி’ படத்துக்காக ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் 199 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் இடம் பெறும் பிரமாண்ட செட்டுகளை அமைக்க 150 நாட்கள் ஆகின. இங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்க வசதி இருந்தது என்ற இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிளாஸ்டிக் பையை செயற்கை கருப்பையாக்கிய விஞ்ஞானிகள்..!!
Next post தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி..!! (கட்டுரை)