மணப்பெண்களுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரின் கல்யாண பரிசால் சர்ச்சை..!!

Read Time:1 Minute, 37 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70மத்திய பிரதேச மாநிலத்தில் மதுபோதையில் வரும் கணவர்களை அடித்து துவைக்க மனைவிகளுக்கு மாநில அமைச்சர் ஒருவர் கிரிக்கெட் பேட்கள் வழங்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் அக்ஷய திரிதியையை முன்னிட்டு 700 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. விமரிசையாக நடைபெற்ற இத்திருமணத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதனை மாநில கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் கோபால் பார்கவா நடத்தி வைத்தார். அப்போது மணமகள்கள் அனைவருக்கும் அமைச்சர் கோபால் பார்கவா, மரத்தாலான பேட்கள் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர், கணவன் குடித்துவிட்டு வந்தால் மரபேட்டால் அடிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதியாது என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

குடித்துவிட்டு வரும் கணவனை இதனால் அடியுங்கள் என்று அந்த மரபேட்டில் எழுதப்பட்டும் இருந்தது. அமைச்சர் வழங்கிய இந்த நூதன பரிசு குறித்த தகவல் மத்திய பிரதேச மக்களிடையே பரவி சுவாரஸ்ய விவாதமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘பாகுபலி-2’ இந்திய திரைத்துறைக்கு பெருமை ரஜினிகாந்த் புகழாரம்..!!
Next post தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள்: நன்மைகள் ஏராளம்..!!