சோர்வை போக்க காலை உணவு அவசியம்..!!

Read Time:2 Minute, 58 Second

201705021349437783_Breakfast-is-a-must-to-get-tired_SECVPFசோர்வான மனநிலையில் இருப்பவர்களால் எந்தவொரு வேலையிலும் முழு ஈடுபாட்டோடு கவனம் செலுத்த முடியாது. சோர்வு, உடலையும், மனதையும் மந்த கதிக்கு மாற்றிவிடும். எளிதான வேலையை கூட விரைவாக செய்து முடிக்க முடியாமல் தடுமாற வைத்துவிடும். சோர்வில் இருந்து மீள உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

காலையில் எழும்போதே பெரும்பாலானோரை சோர்வு தொற்றிக்கொள்ளும். அப்படிப்பட்டவர்கள் தினமும் காலையில் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுத்து சோர்வை விரட்டும். நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படவும் துணை புரியும். இரவில் சரியாக தூங்காததே சோர்வு ஏற்பட காரணமாக இருக்கும். அதன் தாக்கமாக உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

எனவே இரவில் ஆழ்ந்து தூங்குவது அவசியம். அது உடல் சோர்வை போக்கும். அத்துடன் நாள் முழுவதும் உடல் சோர்வின்றி செயல்பட போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் உடல் இயக்கம் சீராக இருக்கும். உடலினுள் போதிய அளவு தண்ணீர் இல்லாவிட்டாலும் உடல் இயக்கம் குறைந்துவிடும். அது சோர்வை உருவாக்கிவிடும். தேவையான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதும் சோர்வை போக்கும். அதிலும் காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும். அதுதான் நாள் முழுவதையும் சுறுசுறுப்புடன் செயல்பட தொடக்கமாக அமையும். காலை உணவை சரியாக சாப்பிடாதவர்களை சோர்வு ஆட்டிப்படைத்துவிடும். எந்தவேலையிலும் கவனத்தை பதிக்க முடியாமல் செய்துவிடும். மூன்று வேளை சாப்பிடும் உணவின் அளவை குறைத்து, அவ்வப்போது சத்தான உணவு பதார்த்தங்களை சாப்பிட்டும் வரலாம். அதுவும் உடல் சோர்வை தடுத்து சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதவி கேட்ட பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!
Next post பிரபல நடிகையை சிக்கவைத்த வீடியோ..!!