நடுவானில் மேலும் கீழும் குலுங்கிய விமானம்: கீழே விழுந்த பயணிகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 54 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ரஷ்யாவில் இருந்து தாய்லாந்து சென்றுகொண்டிருந்த விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் காயமடைந்துள்ளனர்.

ரஷியாவின் ஏரோபிளாட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள்விமானம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது.

பாங்காக் நகரை நெருங்கிய நிலையில் ,காற்றில் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக விமானம் திடீரென குலுங்கி மேலும் கீழுமாக பறக்கத் தொடங்கியது.

சுமார் 10 நிமிடங்கள் விமானம் குலுங்கியபோது இருக்கைகளில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் கீழே விழுந்தனர். இவர்களில் 3 குழந்தைகள் உள்பட 27 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவும், பலத்த சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டன. படுகாயம் அடைந்தவர்களில் 24 பேர் ரஷியர்கள். மூன்று பேர் தாய்லாந்து நாட்டவர்கள் ஆவர்.

பின்னர் சிறிது நேரத்தில் வழக்கம் போல் சீராக பறந்தது. பாங்காக் நகரில் விமானம் தரை இறங்கியதும் 27 பேரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

படுகாயம் அடைந்த பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்துள்ளனர். இதனால்தான் அவர்கள் காயம் அடைய நேரிட்டது என்று விமான அதிகாரிகள் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் 8 இரகசியங்கள்.!!
Next post உதவி கேட்ட பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!