அனுஷ்கா முதல் அதிதி ராவ் வரை: பின்பற்றும் அழகு டிப்ஸ் இதுதான்..!!
ஒவ்வொரு நடிகைகளை பார்க்கும் போதும் அவர்கள் அழகின் ரகசியம் என்னவாக இருக்கும் என்று நாம் அனைவரும் தெரிந்துக் கொள்ள ஆவலாக இருப்போம் அல்லவா?
அந்த வகையில் ஒவ்வொரு நடிகைகளும் தங்களின் அழகிற்கான டிஸ்ப்களை கூறுகின்றனர்.
அனுஷ்கா
பயத்தம்பருப்பு மாவில் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி கழுவினால், பளிச்சென்று இருக்கும்.
எமி ஜாக்சன்
காபித்தூள் ஸ்கிரப்பர் அடிக்கடி பயன்படுத்தினால் சருமம் பளபளப்பாகும்.
சமந்தா
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, நன்றாக அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்து, ஒருமணி நேரம் கழித்து குளித்தால், மேனி மிருதுவாக இருக்கும்.
ஸ்ருதி ஹாசன்
தக்காளி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய ஒவ்வொன்றிலும் 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவினால் முகம் மென்மையாகும்.
நயந்தாரா
அடிக்கடி கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகளை பின்பற்றி வந்தால் முகம் அழகாக இருக்கும்.
தமன்னா
வேப்பிலைப் பொடி, கடலை மாவு, மஞ்சள் தூள் ஆகிய அனைத்திலும் 1/2 டீஸ்பூன் எடுத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, வந்தால், முகம் மிருதுவாக இருக்கும்.
கீர்த்தி சுரேஷ்
வெளியில் சென்று வந்தவுடன் புளிச்ச தயிரை முகம், உடம்பு முழுவதும் தடவி, சிறிது நேரத்திற்கு பின் குளித்து வந்தால் புத்துணர்வு கிடைக்கும்.
த்ரிஷா
தினமும் போடும் மேக்கப்பை இரவில் உறங்குவதற்கு முன் தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும்.
காஜல் அகர்வால்
இயற்கையான பொருட்களை கொண்டு அடிக்கடி கிளென்சிங், டோனிங், மாய்ச்சரைசிங் செய்து கொள்ள வேண்டும்.
அதிதி ராவ்
1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவையான அளவு தயிர் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, கழுவி வந்தால் முகத்தில் நல்ல பொலிவு கிடைக்கும்.
Average Rating