சாலையோரம் தூங்கும் பிரபல நடிகர்..!!
தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் பிரபல பாகிஸ்தான் நடிகர் ஷாஹித் நசீப் வயிற்றுப் பிழைப்புக்காக வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார்.
பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ஷாஹித் நசீப். பாகிஸ்தானில் மிகவும் பிரலமான நடிகர். அவர் துல்லாரி, ஜப் உஸி முஜ்சே மொஹப்பத் ஹுயி, இல்தாஜா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடிக்க வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார். இது குறித்து அவர் கூறயிருப்பதாவது,
நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன். லாகூரில் தங்க வீடு இல்லை. அதனால் சாலையோரம் படுத்து தூங்குகிறேன்.
வீடு வாடைக்கு எடுக்கும் அளவுக்கு வசதி இல்லை. வயிற்றுப் பிழைப்புக்காக யார், யார் வீடுகளுக்கோ பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறேன். சொந்தமாக பாடல் வீடியோவை ரிலீஸ் செய்ய பணம் சேமித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
Average Rating