பதவியை ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர் பிரசண்டா – விரைவில் பதவியேற்கிறார் ஷேர் பகதூர்..!!

Read Time:2 Minute, 21 Second

201705241803037068_Prachanda-resigns-from-PM-post-as-per-pact-with-Deuba_SECVPFநேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்று ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி, பிப்ரவரி 2018-ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் முறைப்படி நடைபெறும் வரை இரு கட்சிகளிடையே மாறி மாறி பிரதமர் பதவி வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே கூறியபடி நேபாள பிரதமர் பிரசண்டா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராக பதவியேற்கும் வகையில் பிரசண்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக தனது ராஜினாமா குறித்து பிரதமர் பிரசண்டா பாராளுமன்றத்தில் பேசுவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் சபாநாயகர் அவையை ஒத்திவைத்ததால் முடியாமல் போனது. இதனையடுத்து இன்று நேபாள அதிபர் பண்டாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை பிரசண்டா ஒப்படைத்தார். பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார்.

நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருகிறது. 1997-க்கும் அரசியல் சூழல் காரணமாக நேபாளத்தில் 20 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தற்போது தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தகையை சூழலில் பிரசண்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரை, பிரசண்டா பிரதமராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலையோரம் தூங்கும் பிரபல நடிகர்..!!
Next post லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ்..!!