ஆண்களின் கரங்களுக்கேற்ற கவர்ச்சிகரமான பிரேஸ்லெட்கள்..!!

Read Time:5 Minute, 46 Second

ஆண்கள் பயன்படுத்தும் அணிகலன்களில் அதிக வடிவமைப்பு மற்றும் பொலிவு நிறைந்த அணிகலன் எனில் அது பிரேஸ்லெட்தான். இன்றைய நாளில் இளவயது வாலிபர் முதல் திருமணமான ஆடவர் வரை அனைவரும் கையில் தங்க பிரேஸ்லெட் அணிவதை ஓர் வழக்கமாகவே கொண்டுள்ளனர். தங்கள் ஆளுமைக்கு அழகு சேர்க்கும் விதமான பல வடிவமைப்பு சிறப்புதன்மை கொண்ட பிரேஸ்லெட்களை வாங்கி அணிகின்றனர். உலகளவில் ஆண்கள் தங்க பிரேஸ்லெட் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் என்பது தனிச்சிறப்பு கொண்டதாகவே உள்ளது. ஏனெனில் ஆண்கள் கனகச்சிதமான அழகியலை தேர்ந்தெடுத்து வாங்குவதுடன் அது தங்கள் கரத்திற்கு கம்பீரத்தை தருகிறதா எனவும் ஆய்வு செய்தே வாங்குகின்றனர்.

விதவிதமான வடிவமைப்பில் பிரேஸ்லெட்கள்

ஆண்கள் அணிகின்ற பிரேஸ்லெட்கள் தற்போது புதிய நுணுக்கமான வேலைப்பாடு மற்றும் மேம்பட்ட டிசைன்கள் உள்ளவாறு உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதற்கென பிரத்யேகமான கணினி வடிவமைப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடம் போன்ற வளை அமைப்பு, பின்னல் போன்ற பட்டை செயின் அமைப்பு, கயிறு போன்ற உருளை அமைப்பு, மெல்லிய கம்பி செயின் அமைப்பு என விதவிதமாய் பிரேஸ்லெட்கள் வந்துள்ளன.

பரவசபடுத்தும் பட்டை செயின் பிரேஸ்லெட்கள்

பட்டையான செயின் அமைப்பு என பொதுவாக சொல்லப்பட்டாலும் அதன் ஒவ்வொன்றின் நுண்ணிய வேலைப்பாடும், செதுக்கல்களும் அதிக ஆர்வத்தை தூண்டுகின்றன. பட்டை என்பதும் அகலம் மற்றும் சற்று குறைவான பட்டை என்றவாறு உருவாக்கம் பெறுகின்றது. அடர்த்தியான மஞ்சள் நிற தகடு இணைப்புகள் இணைந்த பட்டை செயின் அமைப்பு. அதில் ஒவ்வொன்றும் கம்பி இணைப்புடன் நடுவிலும் வெளிற மஞ்சள் வெளிப்பாட்டில் பூச்சிதறல் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல தகடு இணைந்தது பட்டை செயின் பிரேஸ்லெட். இது கொக்கி அமைப்புடன் உள்ளது. கொக்கி பகுதியிலும் நடுவில் வெளிர் மஞ்சளில் ஒரு வடிவம் செதுக்கப்பட்டுள்ளது கூடுதல் பொலிவை தருகிறது. இது எப்போதும் இறுக்கமான அமைப்பிலேயே இருக்கும்.

வித்தியாசமான கம்பி இணைப்பு உருளை பிரேஸ்லெட்

உருளையான கயிறு அமைப்பில் எங்கும் காணாத பிரேஸ்லெட் வடிவமைப்பு. ஆம் இதன் வடிவமைப்பே சற்று மாறுபட்டு உள்ளது. பக்கவாட்டு பகுதியில் பெரிய கம்பி வளையங்கள், நடுப்ப குதியில் சிறிய மேற்புறத்தில் தெரியும்படியான இரு கம்பி வளையங்கள். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று அப்படியே பின்னப்பட்டுள்ளது. தங்க கயிற்றில் பின்னப்பட்ட கம்பி வளைய பிரேஸ்லெட். புதுமையான வடிவமைப்பு என்பதால் பல ஆண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது சற்று தளர்வான வகை பிரேஸ்லெட்.

நெருக்கமான பின்னல் பிரேஸ்லெட்

இது கடம் போன்ற வடிவமைப்பு. ஆனால் இதில் கொக்கி உள்ளது. இதன் உருவாக்கம் தூர இருந்து பார்ப்பதற்கு சாதாரண வளைய பிரேஸ்லெட் போல காட்சி தரும். ஆனால் நெருங்கி வந்து பார்க்கும்போது நெருக்கமான பின்னல் வளை பிரேஸ்லெட் என்பது புரியவரும். நடுப்பகுதி மேல் எழுந்தவாறும், ஓரப்பகுதி கீழ் ஒடுக்கப்பட்டவாறும் பின்னப் பட்டுள்ளன.

புதிய இரட்டை நிற சாயல் பிரேஸ்லெட்கள்

பட்டை மற்றும் பெரிய கம்பி பின்னல்கள் கொண்ட பிரேஸ்லெட்கள் இரட்டை நிற சாயலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது செவ்வக கட்டங்கள் இணைப்புகளுடன் பிரேஸ்லெட் உருவம் பெற்றுள்ளது. இதில் ஒரு கட்டம் மஞ்சள் நிறத்திலும், மற்றொன்று வெள்ளை நிறத்திலும் இருப்பது போன்று தோற்றப்பொலிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் பட்டை செயின் அமைப்பு பிரேஸ்லெட்டிலும் மேல்பகுதியில் வெள்ளை நிற பூக்கள், கணித வடிவங்கள் உள்ளதுபோன்று அற்புதமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுபோல் மாறுபட்ட மூன்று மற்றும் இரண்டு வடிவமைப்பு பின்னல்கள் கொண்ட பிரேஸ்லெட்களும், மெல்லிய கயிறு வகை பிரேஸ்லெட்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனத்தளர்ச்சியை விரட்டும்.. கலகலப்பான காதல் ஆய்வுகள்..!!
Next post ஆரவ்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!! (வீடியோ)