ஆரவ்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 42 Second

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற விபரீதத்தால் பலரது கோபப் பேச்சுகளுக்கு ஆளானவர் நடிகர் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகும், சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் டீம் கொண்டாட்டத்துக்குப் பிறகும் அவரை மறைமுகமாக ஆதரித்து வந்தவர்களும் நேரடியாக ‘ஆரவ் யூ ஆர் ஆசம்’ என்று சப்போர்ட் செய்யத் தொடங்கிவிட்டனர்.

ஆரவ்வால் பாதிக்கப்பட்ட ஓவியாவும், அவருமே நல்ல நண்பர்களாகப் பேசிக்கொண்டபோதும், கசப்பான மருத்துவ முத்தத்துக்குப் பிறகு உருவான ஓவியா ஆர்மி, ஆரவ்வை விடுவதாக இல்லை. அந்த ஆர்மியின் கிண்டல்களை எதிர்கொள்ளவும், திருப்பிக் கொடுக்கவும் ஆரவ் ரசிகர்கள் சேர்ந்து ‘ஆரவ் ஆர்மி’ என்ற ஒன்றை உருவாக்கத் தொடங்கினார்கள்.

இப்படிப்பட்ட இரு அணிகள் என்னவெல்லாம் செய்யும் என்பதை அஜித் – விஜய் ரசிகர்களின் மூலம் தற்போதைய டிஜிட்டல் தலைமுறை நன்றாகவே பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால், ஆரம்பத்திலேயே இவர்களை நல்வழிப்படுத்த ஆர்மியெல்லாம் தேவையில்லை. அனைவரும் குடும்பமாகவே இருப்போம். அமைதி நிலவட்டும் என்று தனது ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் ஆரவ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் கரங்களுக்கேற்ற கவர்ச்சிகரமான பிரேஸ்லெட்கள்..!!
Next post கடவுளின் இருப்பு உண்மையா?..!!