பூமிக்கு தங்கம் வந்தது எப்படி? – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்..!!

Read Time:2 Minute, 17 Second

தற்போது பூமியில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் அண்டவெளியில் உள்ள இறந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் இரண்டு மோதிக்கொண்டதனால் உருவாகிய கணிமங்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டவெளியில் நடைபெறும் நட்சத்திர மோதல்கள் ஈர்ப்பு அலைகள் (gravitational waves)எனப்படும் தொழில் நுட்பம் மூலமாக தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன.

அதன்படி, சுமார் 130 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹைட்ரா உடுக் கூட்டத்தில் உள்ள என்.ஜி.சி 4993 என்ற நட்சத்திரத் தொகுதியில் உள்ள நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலின் அதிர்வானது தற்போதே பூமியை வந்தடைந்துள்ளது.

இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனூடாகவும், நட்சத்திர மோதல்களை தொடர்ந்து அவதானித்ததன் மூலமாகவும் தங்கம் மற்றும் பிளாட்டினங்களின் தோற்றம் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

நட்சத்திர மோதலின் போது வெளிப்படுத்தப்படும், சிதறல்கள் மற்றும் ஆற்றலின் காரணமாகவே தங்கம் பிளாட்டினம் போன்றவை உருவாகின்றன எனவும், அண்டத்தில் நடந்த நட்சத்திர மோதல்களின் மூலமாகவே பூமியிலும் இவை கிடைக்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரு நியூட்ரான் நட்சத்திரங்களின் இணையும் போது உருவாக்கப்படும் மாபெரும் வெடிப்பின் போது வெளிப்படுத்தப்படும் மீதங்கள் பில்லியன் கணக்கான டிகிரி வெப்பநிலைக்கு தள்ளப்படும் போது உருவாகும் சாம்பலே தங்கம் மற்றும் பிளாட்டினம் என விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊசலாடிய ஜேர்மனி விமானம்: வைரலாகும் வீடியோ ..!!
Next post காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்..!!